வியாழன், 20 நவம்பர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 19!




சென்ற பதிவின்  தொடர்ச்சி:-


  சுமார் ஒரு மாதம் கழித்து அன்று வந்தவரின் உறவினர் அதாவது

காணிக்கை போட வேண்டாம் என்று தடுத்தவர் ஓடி வந்தார். ஐயா மிகவும்

அவசரம் நாடி படிக்க வேண்டும் என்றார். யாருக்கு என்றேன்? அன்று நான்

அழைத்து வந்தேனே அவருக்குத் தான் படிக்க வேண்டும் என்றார்.

ஏற்கனவே அவமதித்து இருந்ததால் இப்போது யாருக்கும் படிப்பதில்லை

என்று சொல்லி விட்டேன். மிகவும் கதறிய நிலையில் ஐயா அப்படி

சொல்லாதீர்கள். அன்று நாங்கள் நடந்துக் கொண்டது தவறு தான்.

அதற்கான தண்டனையினைப் பெற்று விட்டோம்,. பெரிய மனது செய்து

நாடி படித்து சொல்லுங்கள் என்றார். என்ன தண்டனை? என்ன விபரம்?

எனக் கேட்டேன். ஐயா அன்று தங்களிடம் நாடி கேட்டு விட்டு அவர்

காணிக்கை தர வந்தார்.


அந்த காணிக்கையை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதால் தான் அதை

நான் தடுத்தேன். ஆனாலும் தண்டனை அவருக்கு கிடைத்து விட்டது.

விவசாய பூமியில் இரவில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் இவர் ஈடுபட்டுக்

கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு கருநாக பாம்பு எங்கிருந்தோ வந்து

இவரை தீண்டி விட்டது. நீங்கள் அன்று படித்தது அப்படியே 100% நடந்து

விட்டது. இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.


மருத்துவர்கள் கைவிடும் நிலையில் இருக்கிறார். உடல் முழுவதும் நீல

நிறமாக மாறிவிட்டது. மிகவும் துயரத்திலும் ஆபத்திலும் இருக்கிறார்.

இராகு திசையில் இராகு புத்தி நடக்கிறது. இராகு 6ல் உள்ளார். எனவே

விஷ கிரகம் என்று ஜோதிடத்திலும் சொன்னீர்கள், நாடியிலும் சொன்னீர்கள்

தோட்டத்தில் கருப்பசாமி உண்டு என்பதும் உண்மை.

  ஆனால் அவர்கள் தீபமேற்றி வழிபடவேயில்லை. எனவே அந்த கருப்பசாமி

இவர் உயிரை மீட்டுத் தருவாரா? என்பதும் சந்தேகமே. தங்களை சிறுவன்

என நினைத்து பிழை செய்து விட்டோம். மன்னித்து ஒரு வழிகாட்டுங்கள்

என கண்ணீர் விட்டு கதறியதைப் பார்த்து மனமிறங்கி வருவதற்குள் எனது

குடும்பத்தினர் இதை கேட்டு விட்டு படித்துச் சொல்லவும் என்று

வேண்டுகோள் விடுத்தார்கள். சரி தவறை உணர்ந்து விட்டார்கள்

தண்டனையும் பெற்று விட்டார்கள். இதன் பின்பு நமது நாடி மூலம் நலம்

கிட்டும் என்ற பிராப்தம் இருந்தால் கிட்டும் என்று சொல்லி குறித்து,

மந்திரம் ஜெபித்து, தியானித்து பூஜித்து தவறுக்கு சிறு காணிக்கை

வைத்து சித்தர்களை சிந்தையில் வைத்து ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவநாடியைப்

பிரித்தேன். பின்வரும் பாடல் வந்தது.


“ஆபத்து வந்ததுவும்

அன்றே உரைத்தோம்

ஆனாலும் அபசாரம்

அது நேர்ந்ததால்

ஆபத்தும் நேர்ந்தது

அய்ந்தின் மடங்கு

அவசர செலவு செய்

அவசியம் தவறாமல்

அர்ச்சித்து வா கருப்பை

கரை சேர்வாய்

ஆசி! ஆசி! ஆசி!

  என்று மிகச் சுறுக்கமாக மிக அற்புதமாக அருள்வாக்கை ஜீவநாடியில்

அள்ளி வீசினார் ஆறுமுகப் பெருமான். அன்று செய்தது அபசாரம்

என்பதையும் சுட்டிக் காட்டினார். ரூ.500/- கொடுப்பதற்கு ஆயிரம் முறை

யோசித்து அதையும் கொடுக்காமல் சித்தர்களை அவமதித்ததால்அந்த 5ன்

மடங்கு வரை செலவு செய்ய வேண்டும். அவசர சிகிச்சை தீவிரமாக

செய்தால் விஷம் இறங்கி அவர் வாழ்வு மீளும். அதே போல் அந்த

கருப்பசாமியை அர்ச்சித்து வர வேண்டும் என்று சொல்லி விபூதி,

எலுமிச்சை கொடுத்து ஆசி கூறி அன்புடன் வழி அனுப்பி வைத்தேன்.


எந்த அவசரமானாலும் தொடர்பு கொள்ளுமாறும் சொன்னேன். அவரும்

பூரண திருப்தியுடன் சென்று அதேபோல் செய்கிறேன் என்று வேகமாகச்

  மீண்டும் ஒரு மாதம் கடந்து பாதிக்கப்பட்ட அந்த நபர் தனது

குடும்பத்துடன் அவரது உறவினரான மூவரையும் கூட்டிக் கொண்டு

நமது முருகன் ஆலயத்திற்கு வந்தார். அப்போது அருள்வாக்கு மேடையும்

சுயம்பு முருகன் சிலை மட்டுமே உள்ள மிகச் கிறிய கோவில் அங்கு

அமர்ந்தே ஜீவநாடி அருள்வாக்கு சொல்லுவது வழக்கம். இப்போது பெரிய

ஆலயம் கட்டப்பட்டு விட்டாலும் அந்த அருள்வாக்கு மேடையில் தான்

இப்போது அமாவாசையில் நாடி சொல்லப்படுகிறது.


எனது குடும்பத்தினரும் கூடி சுமார் 30 பேர் ஆலயத்தில் கூடி

விட்டார்கள். என்ன விஷயம் என்றேன். பெரிய மாலை போட்டு வஸ்திரம்

சாற்றி, சால்வையெல்லாம் போட்டு சில ஆயிரங்கள் தட்சணை வைத்து

பழங்களுடன் கொடுத்து குடும்பமே சாஷ்டாங்கமாக விழுந்து ஐயா

வயதில் சிறியவராக இருந்தாலும் தாங்கள் ஒரு சித்தர் பிறவி என்பதை

நாங்கள் உணர்ந்து விட்டோம். எங்களை மன்னித்து ஆசிர்வதியுங்கள்


எனக்கு எப்போதுமே தற்பெருமையோ, தலைக்கணமோ இல்லை. நன்றாக

வாழ்வீர்கள் எழுந்திருங்கள் என எழுப்பி சித்தர்களையும் முருகப்

பெருமானையும் அவமதிப்பது குற்றம். எனக்கு சூட்டிய மாலை மரியாதை

அத்தனையும் அந்த முருகனுக்கே அர்ப்பணம். நான் சித்தர் பிறப்பு அது

இது என்று எப்போதும் சொல்லிக் கொள்வதில்லை. நான் மிக மிக மிக

சாதாரண மனிதன். ஆனால் சித்தர்களும் முருகனும் அப்படியில்லை.

அவர்களுக்குத் தர வேண்டிய மரியாதையை எப்போதும் தர வேண்டும்.

ஏதோ வந்தோம் கேட்டோம் என்று விளையாட்டாக இருப்பது பல அபசார

தோஷங்களை ஏற்படுத்தி விடும். அதனால் தான் அபூர்வமாக சிலருக்கு

மட்டும் நாடி உரைக்கிறேன். கலியுகத்தில் ஏராள சிக்கல் இருப்பதால்

சோதனை செய்யாமல் நாடி உரைப்பதில்லை. சித்தர்கள் அனுமதி தராமல்

நாடி படிப்பதில்லை. பணத்திற்கு ஆசை பட்டும் உரைப்பதில்லை என்பது

என்னை சந்தித்து வருபவர்கள் அனைவரும் அறிந்த விஷயம்.


சரி என்ன நடந்தது சொல்லுங்கள் என்றேன். ஐயா தாங்கள் ஜீவ நாடியில்

சொன்னது போல் 5ன் மடங்காக 5 லட்சம் செலவு செய்த பின்பே உயிர்

பிழைத்து வந்து தங்கள் முன்பு நிற்கிறேன். இனி காலம் பூராவும்

ஞானஸ்கந்த மூர்த்திக்கு சேவை செய்கிறேன். என்றார். வாசகர்களுக்கு ஒரு

சந்தேகம் வரலாம். சித்தர்கள் 500 ரூபாய்க்கு ஆசைப்படுவார்களா? என்று

இந்த இடத்தில் மிகக் கவனமாக யோசிக்க வேண்டும். தட்சிணை என்பது

மன நிறைவுக்காக நாம் தருகின்ற மரியாதை. அது எவ்வளவாக

இருந்தாலும் மன நிறைவோடும், மரியாதையோடும் தர வேண்டும் என்பது

  நாடியில் வாக்கு கேட்டுவிட்டு அந்த நாடியை அவமதிக்கும் வகையில்

சொல்லுவது தான் குற்றம். எனவே சித்தர்கள் பணத்திற்கு மயங்க

மாட்டார்கள். அதே சமயம் மரியாதைக் குறையை அவர்கள்

விரும்புவதில்லை. ரூ.5 லட்சம் செலவு செய்தேன் என்பவர்கள் டாக்டர்

கேட்ட அத்துணை பணத்தையும் கொடுத்தவர்கள் சித்தர்களுக்குத் தருகின்ற

தட்சிணை விஷயத்தில் ஏன் தவறு செய்ய வேண்டும். பேருந்தில் ஏறி ரூ.5/-

கொடுத்தால் தான் பயணம் செய்ய முடியும் எனும் நிலையில் ரூ.4.99

பைசா கொடுத்து 1 பைசா இல்லை என்றாலும் பயணிக்க முடியுமா?

சித்தர்கள் வாக்கு என்ன அவ்வளவு கீழாகவா போய் விட்டது?


அதேபோல் ஜோதிடம் மூலம் பணம் வாங்கினால் தரித்திரம் பிடிக்கும்

என்று மெத்தப் படித்த மேதாவிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர்

சொல்கிறார்கள். கள்ளச் சாராயம் திருட்டு, விபச்சாரம் போன்ற கீழ்நிலைத்

தொழில்களோடு இலஞ்சம் வாங்கி, ஊரை ஏமாற்றிப் பிழைப்பவர்கள்

மட்டும் பணம் சம்பாதிக்கலாமா? அது தரித்திரம் இல்லையா? அது தான்

தரித்திரம். ஜோதிடம் மூலம் வருகின்ற தொகை புண்ணியம். தெய்வத்தின்

காணிக்கை அதை தவறான் வழியில் செலவு செய்தால் தான் குற்றம். இது

என்னவோ பணம் வாங்குவதற்காகச் சொல்கிறேன் என எண்ணி விட

வேண்டாம். எங்கு ஜோதிடம் கேட்டாலும் உரிய தட்சிணை கொடுத்து அந்த

ஜோதிடனை வணங்கி வாருங்கள். உடனே நற்பலன்கள் நடக்கும். அவர்

உண்மையான ஜோதிடராக இருக்க வேண்டும் என்பது அவசியம்.



                                   “ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

1 கருத்து:

  1. ஓம் அகஸ்திய மஹா ரிஷி நமஹ!!!ஞான ஸ்கந்த சரவண ஜோதியே நமோ நமஹ.!!!...ஞான ஜோதி அம்மா திருவடிகள் சரணம் சரணம்!!!

    பதிலளிநீக்கு