வியாழன், 18 செப்டம்பர், 2014

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி – 14



ஞான ஸ்கந்த மூர்த்தியை குருவிடம் முறைப்படி தீட்சை பெற்று உபாசனை

செய்து வந்த ஆரம்ப காலம். எனது 16 வயதில் பாதி புரிந்தும், பாதி

புரியாமலும் மந்திர ஜபத்தை மட்டும் விடாது குருவுடன் அடிக்கடி

சத்-சங்கத்தில் ஈடுபட்ட காலம். ஒரு முறை எனது பேனா தொலைந்து

விட்டது. அப்போது நான் 8 ஆம் வகுப்பு படிக்கிறேன். பேனாவின் விலை

ரூ.5/- மட்டுமே அது அப்போது என்னைப் பொறுத்தவரையில் அது பெரிய

தொகை. எப்படி வீட்டில் பொய் சொல்வது யார் எடுத்தார்களோ முருகா

அவர்களை மன்னித்து விடு. அந்த வயதிலும் ஒரு பக்குவம் தந்தது

முருகப் பெருமானும் எனது குருவின் அமுத மொழிகளும் தான். முருகன்

உன் கையில் இருக்கிறார் என நினைத்துக் கொண்டு யாருக்கும் துன்பம்

நினைக்காதே! அது முருகனுக்குப் பிடிக்காத ஒன்று இப்படி உபதேசித்த

குரு எப்படி இருப்பார். அவரது திருவடியை நான் என்றுமே மறந்தது

இல்லை. எனது குருவிடமும் நான் எதையும் மறைத்ததும் இல்லை.

ஆனால் இந்த பேனா காணாமல் போன விஷயத்தை மட்டும் மறைத்து

விட்டேன். காரணம் பயம். எனது குருநாதர் 48 ஆண்டுகள் வெள்ளிக்கிழமை

விரதம் இருந்து ஒரு வெள்ளி கூட கண் மூடி தூங்காதவர். வெள்ளியில்

ஒரு பொழுது உண்டு கண் மூடாமல் கந்தனையே சிந்தனை செய்வது

அவரது தவம். அவரது தவத்தின் பலன் முக்காலத்தையும் முருகன் உள்

நின்று உரைத்திடும் பாக்கியம் அவருக்கு இளமை முதலே கிட்டியது.

முருகன் உரைப்பதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் வருகின்ற

பக்தர்களுக்கு விடிய விடிய அருள்வாக்கு உரைப்பார். அப்படியே 100%

துல்லியமாக இருக்கும். தீர்ந்த பிரச்சினைகள் ஏராளம். ஓய்ந்த அவலங்கள்

ஏராளம். நீங்கிய ஆவிகள், சாந்தியான தேவதைகள் ஏராளம். இப்படி

தாராளமாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 அன்று ஒரு நாள் வெள்ளிக்கிழமை இரவு பூஜை முடிந்து குருநாதர்

அருள்வாக்கு பீடத்தில் அமர்ந்தார். சாதாரண மனிதன் போல் அன்பாகப்

பேசுவார். அருள்வாக்கு சொல்லும்போது காவியுடை அணிந்து காவியில்

முண்டாசு கட்டி ருத்திராட்சம் போட்டு அந்த ஆசனத்தின் மீது அமர்ந்து

கையில் பிரம்புகளை வைத்து அமர்ந்தால் சாட்சாத் மிகப் பெரிய சித்தர்

அமர்ந்திருப்பது போன்றே கம்பீரமாக இருக்கும். ஆட மாட்டார். பாடுவார்

மடை திறந்த வெள்ளம் போல் பாடல் வகை வகையாய் வந்து கொட்டும்.

வந்திருக்கும் மக்கள் அனைவரும் கை கட்டி வாய் பொத்தி கேட்டு விட்டு

ஆச்சரியத்துடன் வெளியேறுவார்கள். சொன்னது சொன்னபடி நடந்து

விடும். பின்பு அருள்வாக்கு முடிந்த உடன் சாதாரண மனிதன் போல்

மாறி விடுவார். காவி கட்டுவதில்லை. அருகில் நான் அமர்ந்துக் கொண்டு

இருப்பேன். குருவை மிஞ்சிய சிஷ்யனாக இவன் வருவான் என்று அடிக்கடி

சொல்வார். அன்று கேட்ட அந்த கேள்வி என்னை மீண்டும் முருகனிடம்

நெருங்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

 ஏம்பா? உன் பேனா தொலைந்து விட்டதே? கிடைத்ததா?

எனக்கு தூக்கி வாரி போட்டது. பேசுவது அந்த முருகப் பெருமான்

அன்றோ. எனக்கும் அந்த முருகனுக்கும் மட்டுமே தெரிந்த அந்த இரகசியம்

இப்போது வெளிச்சமிடப்பட்டது. ஆம் சுவாமி என சொன்னேன். சரி

கிடைக்கும் போ என்றார். சரி என்றேன் அந்த வயதில் எனக்கு இது பெரிய

புதிராக இருந்தது. ஆச்சரியமாக இருந்தது. சொன்னது சொன்னபடி ஒரே

வாரத்தில் ரூ.5/- எனக்கு பரிசாக வந்தது. பேனா கிடைக்கவில்லை. அந்த

பேனாவிற்குரிய பணம் கிடைத்தது.

 குருநாதரிடம் இருந்து சிறுகச் சிறுக அனுபவம் பெறப் பெற அவரது

அனைத்து சக்திகளும் எனக்கு கிடைக்க ஆரம்பித்தது. அதை அவர்

பலமுறை உறுதி செய்தார். அன்று ஒரு நாள் அமாவாஸை பூஜை முடிந்து

நமது ஞானஸ்கந்தர் நாடியில் முருகன் என்ன உரைப்பார் என மக்கள்

கூடி குழுமியிருந்தார்கள். நாடியைப் பிரிக்காமலேயே ஒரு பெண்மணியைப்

பார்த்து அருள்வாக்கு மேடையில் இருந்து என் மூலம் முருகப் பெருமான்

கேட்டார்.

 என்னம்மா, பாயாசம் வைத்து அனைவரும் பங்கிட்டுக் குடித்தீர்களே

அங்கேயே எனது படமும் இருந்தது அதன் முன்பு சிறிது பாயாசம்

வைத்திருக்கலாமே? ஏன் நீ குடிக்கும் அந்தப் பாயாசத்தை நான்

குடிக்கக் கூடாதா? என்ற கேள்வியை கேட்டவுடன் குழுமி இருந்த

மக்கள் குதூகலித்து குமரனின் கருணையையும் சக்தியையும் எண்ணி

வியந்தார்கள். இது முற்றும் உண்மை. சுவாமி படத்திற்கு எப்போதுமே

நைவேத்யம் செய்து அதன் பின்பே சாப்பிடும் அந்த பெண்மணி அன்று ஒரு

நாள் மட்டும் வைக்காமல் விட்டு விட்டதை முருகப் பெருமான் சொல்லி

விட்டார் என்றால் முருகப் பெருமானின் பார்வை எப்போதுமே அவர்கள்

மீது பட்டு வருவது தானே அர்த்தம். அந்தப் பெண்மணி மெய் சிலிர்த்தார்.

முருகன் மீது அவருக்கு எப்போதுமே மாறாத பக்தி. இது எப்படி என்னால்

சொல்ல முடிகிறது? என்று பலர் கேட்கிறார்கள். எல்லாம் முருகனின்

செயல். என் மனதில் அவர் சொல்வதை நான் அப்படியே சொல்கிறேன். மாய

வித்தியோ, மந்திர வித்தையோ அல்லது மை வித்தையோ கிடையாது.

முருகனது தூய அருள் வாக்கை எட்சினி சொல்லும் குறி போல ஒப்பிட்டுப்

பேசுவதே மாபாதகமான செயல், அனுபவத்தில் தண்டனைகளையும்

பார்த்திருக்கிறேன்.

 எட்சினிகள் என்பது சிறு தேவதை. முறைப்படி பூஜை செய்து சிலர்

எட்சினைகளை வசியம் செய்து வைத்துக் கொண்டு வருவோர் வியக்கும்

வண்ணம் சில சூட்சுமங்களைச் சொல்லி அசத்துவார்கள். எட்சினியை

வைத்து குறி சொல்வார்கள். இது ஒரு சாதாரண பிரச்சினைகளைத் தீர்க்க

உதவும் ஜீவநாடி படிப்பவர்கள் கூட இந்த எட்சினி மூலமே சொல்கிறார்கள்

என்று இணையத்தில் படித்ததாக எனது வாசகர் ஒருவர் கேட்டிருந்தார்.

இருக்கலாம். எட்சினிகள் சொல்வதை ஜீவநாடி என்று கூட சொல்லலாம்.

ஆனால் எதிர்காலத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் துல்லியமாக

எட்சினிகளால் சொல்ல முடியாது.

                                     ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

1 கருத்து: